த்ரிஷா செல் நம்பர் என நினைத்து தோழிகளுக்கு ரசிகர்கள் தொல்லை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
த்ரிஷா செல் நம்பர் என நினைத்து அவரது  தோழிகளுக்கு ரசிகர்கள் போன் செய்து தொல்லை கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில் செல்ல பிராணிகளை வளர்க்கும் ஆர்வத்தை உருவாக்கும் வகையில் ப்ளு கிராஸ் அமைப்பிற்கு சென்று அங்கிருந்த செல்ல நாய்களுக்கு உணவளித்தார் த்ரிஷா. பின்னர் சில ரசிகர்கள் அவரது கையால் செல்ல நாய்களை வீட்டில் வளர்ப்பதற்காக பெற்று சென்றனர். இதுபோல் நாய்க்குட்டிகள் பராமரித்து வளர்க்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட செல்போன் நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் என்று த்ரிஷா தரப்பில் அறிவிக்கப்பட்டது. இது த்ரிஷா நம்பர் என நினைத்து பல ரசிகர்கள் போன் செய்து தொல்லை கொடுக்க தொடங்கினர். மறுமுனையில் த்ரிஷா பேசாததால் எரிச்சல் அடைந்தனர். இதுபற்றி டுவிட்டர் பக்கத்தில் த்ரிஷா கூறும்போது,'கைவிடப்பட்ட நாயக்குட்டிகளை வளர்க்கும் எண்ணம் உடையவர்கள் மட்டும் குறிப்பிட்ட செல்போனில் தொடர்பு கொள்ளுங்கள். இது என்னுடைய பர்சனல் நம்பர் இல்லை. சக தோழிகளின் நம்பர். நான் பேசுவதாக நினைத்து ரசிகர்கள் அவர்களுக்கு தொல்லை தர வேண்டாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.


 

Post a Comment