'லெஸ்பியன் வேடத்தில் நானா... சீச்சீ, நான் பொம்பள சிங்கம்... கோடி ரூபா கொடுத்தாலும் மாட்டேன்!'

|

Sona Rules Lesbian Roles
"நான் பொம்பளை சிங்கம். கோடி ரூபாய் கொடுத்தாலும் லெஸ்பியனாக நடிக்க மாட்டேன்'' என்கிறார் நடிகை சோனா.

நேற்று தன் பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகை சோனா, செய்தியாளர்களிடம் கூறுகையில், " 86 கிலோ எடை இருந்த நான் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் 70 கிலோவாக குறைந்து இருக்கிறேன். இன்னும் உடல் எடையை குறைத்து, சினிமா உலகையே திரும்பி பார்க்க செய்ய வேண்டும். இதுதான் என் பிறந்த நாள் சபதம்.

இந்த பிறந்த நாளையொட்டி, சென்னை அடையாறில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து 3 வயது பெண் குழந்தையை தத்து எடுக்கப் போகிறேன்.

நிச்சயமாக என் சொந்த வாழ்க்கையை படமாக தயாரிப்பேன். அதன்மூலம் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வெளியுலகம் தெரிந்து கொள்ளச் செய்வேன்," என்றார்.

நமீதா ஒரு படத்தில் லெஸ்பியனாக நடிக்க மறுத்து இருக்கிறார். அப்படி ஒரு வேடம் உங்களுக்கு வந்தால், நடிப்பீர்களா?, என்று கேட்டதற்கு, "நான் பொம்பளை சிங்கம். கோடி ரூபாய் கொடுத்தாலும், லெஸ்பியனாக நடிக்க மாட்டேன். அதேபோல் நிர்வாணமாகவும் நடிக்க மாட்டேன். பணம்தான் பெரிது என்று நினைத்திருந்தால், வருடத்துக்கு 50 படங்களில் நான் நடித்திருப்பேன்," என்றார் அசராமல்.
 

Post a Comment