ஆமிர்கானுக்கு நாடாளுமன்ற குழு திடீர் அழைப்பு

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

டாக்டர்கள் மக்களை பயமுறுத்தி பணம் பறிக்கிறார்கள் என ஆமிர்கான் கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு அவருக்கு திடீர் அழைப்பு விடுத்துள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர்கான், டிவியில் சத்யமேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் மக்கள் பிரச்னைகள் குறித்து அவர் அலசுகிறார். இந்நிகழ்ச்சியில் ஆமிர் பேசும்போது, ÔÔடாக்டர்கள் சாதாரண மருந்துகளால் குணமாகும் நோயைகூட மறைத்து, அதற்காக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி பணம் பறிக்கின்றனர்ÕÕ என குற்றம் சுமத்தினார். இதற்கு இந்திய மருத்துவ சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டாக்டர்களை பற்றி அவதூறாக கூறியதற்கு ஆமிர்கான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். ஆனால் இதை ஆமிர்கான¢ ஏற்கவில்லை. சில டாக்டர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுகிறார்கள். அவர்களை பாராட்டுகிறேன். ஆனால் சில டாக்டர்கள் பணம் பறிப்பதையே குறிக்கோளாக கொண்டு பணியாற்றுகின்றனர். இதை வெளிப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். இந்நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் (வர்த்தகம்) சாந்த குமார் எம்.பி. தலைமையிலான நாடாளுமன்ற குழுவினர் ஆமிர்கானை வரும் வியாழக்கிழமை நேரில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்காக ஆமிர்கான் மக்களை நேரில் சந்தித்து பேசி வருகிறார். இதனால் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு எம்.பி.க்கள் குழுவினர் அவரை கேட்டுள்ளனர். இதற்கு ஆமிரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

 

Post a Comment