காகா ராதாகிருஷ்ணன் என பெயர் வந்தது எப்படி?

|

How Veteran Actor Radhakrishnan Got Title Kaka

மறைந்த நடிகர் ராதாகிருஷ்ணன் பெயருடன் 'காகா' என் என்ற பட்டப் பெயர் ஒட்டிக் கொண்டது எப்படி என்பது குறித்து ஒரு சுவையான ப்ளாஷ்பேக்.

இந்த ப்ளாஷ்பேக்கை சொன்னவரும் ராதாகிருஷ்ணன்தான். இறப்பதற்கு கொஞ்ச காலத்துக்கு முன்பு ஒரு பேட்டியின்போது அவரிடம், உங்கள் பெயருடன் காகா என்ற பெயர் வந்தது எப்படி? என்று கேட்டிருந்தார்கள்.

அதற்கு அவர் அளித்த பதிலில், "மங்கையர்க்கரசி' படத்தில் ஒரு டயலாக் வரும்.

மதுரம்மா (டிஏ மதுரம்) என்கிட்ட 'நீ அரசாங்கத்துல போய் எப்படியாவது, காக்கா பிடிச்சாவது வேலைல சேர்ந்துடு'ன்னு சொல்லுவாங்க. உடனே நான் அம்மா சொல்லிட்டாங்களேன்னு, ஒரு காக்காவப் புடிச்சுகிட்டுப் போய் வேலை கேட்பேன். வேலை கிடைக்காது. திரும்பி வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சொல்லுவேன். நீ சொன்ன மாதிரியே காக்காவப் புடிச்சுக்கிட்டு போய் வேலை கேட்டேன், அப்பவும் கிடைக்கலம்மா. இங்க பாரு காக்கா'ன்னு சொல்லுவேன். அந்த காமெடி அப்போ ரொம்ப பேசப்பட்டது. அதிலிருந்துதான் காக்கா ராதாகிருஷ்ணன்னு எல்லோரும் கூப்பிட ஆரம்பிச்சாங்க..." என்றார்.

காகா ராதாகிருஷ்ணன் தன் இறுதிக்காலத்திலும் கூட படங்களில் நடித்துக் கொண்டுதான் இருந்தார். அதற்கு முக்கிய காரணம், கமல்ஹாஸன். அவர்தான் தனது தேவர்மகன் படத்தில், சிவாஜியின் தம்பி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை காகா ராதாகிருஷ்ணனுக்கு வழங்கி, அவரது அடுத்த ரவுண்டைத் தொடங்கி வைத்தார்.

 

Post a Comment