துப்பாக்கி ஷூட்டிங்கில் சண்டை காட்சியில் உயரத்தில் இருந்து குதித்தபோது விஜய்க்கு கால் இடறி மூட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும், வலியையும் பொருட்படுத்தாமல் அவர் நடித்ததாகவும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவி்த்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் படம் துப்பாக்கி. இந்த படத்தின் ஷூட்டிங்கில் விஜய்க்கு காயம் ஏற்பட்டு தற்போது அவர் லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் விஜயக்கு காயம் எப்படி ஏற்பட்டது என்று முருகதாஸ் கூறுகையில்,
துப்பாக்கி படத்திற்காக சண்டை காட்சி ஒன்றை படமாக்கினோம். அந்த காட்சிக்காக விஜய் உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும். அவரும் உயரத்தில் இருந்து குதித்தார். ஆனால் திடீர் என்று கால் இடறியதில் அவரது மூட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் குதித்தபோது மூட்டு பெல்ட் அணியவில்லை. காலில் காயம் ஏற்பட்ட போதிலும் வலியோடு அந்த காட்சியை நடித்துக் கொடுத்தார். அதன் பிறகே சிகிச்சைக்கு சென்றார் என்றார்.
விஜய் இன்னும் ஓரிரு நாட்களில் ஷூட்டிங்கிற்கு வருவார் என்று கூறப்படுகிறது. இன்னும் 4 நாட்கள் ஷூட்டிங் தான் பாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
+ comments + 1 comments
negga egga thalapathi illa talivan&talapathi
Post a Comment