தங்க மோதிரம், நிதி உதவிகள்.. ஒரு அரசியல் தலைவருக்கு நிகரான ஆரவாரத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய விஜய்!

|

சென்னை: நடிகர் விஜய் இன்று தன் பிறந்த நாளை பல்வேறு நற்பணிகளுடன் கோலாகலமாகக் கொண்டாடினார்.

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்க மோதிரங்களை அணிவித்து, அங்கிருந்து தாய்மார்களின் வாழ்த்துகளைப் பெற்றார்.

vijay celebrates his birthday like political leader   
Close
 


குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிவிட்டு, பல்வேறு ஆதரவற்ற, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி இல்ல குழந்தைகளுக்கு அவர் உணவு, உடைகள் மற்றும் உதவிகளை வழங்கினார்.

லிட்டில் பிளவர், மெர்ஸி ஹோம், ஸ்பாஸ்டிக் சொஸைட்டி ஹோம், பொன்னேரி அன்புக் கரங்கள், ஆதம்பாக்கம் ஜெரோகம் இல்லம் போன்ற ஆதரவற்ற இல்லங்களுக்கு விஜய் தன் கையால் உணவு வழங்கினார்.

தனது வித்யா சாரிடபிள் ட்ரஸ்ட் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 2 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்களை இன்று வழங்கினார் விஜய்.

இவைதவிர, மாநிலம் முழுவதிலும் உள்ள விஜய் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், தத்தமது பகுதிகளில் விரிவாக பிறந்த நாள் விழா நற்பணிகளைச் செய்தனர்.

விஜய் தங்கமோதிரம் வழங்கியது போலவே, அவரது ரசிகர்களும் தங்கள் பகுதி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளில் விஜய்யை விட அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரன் ரொம்ப பிஸி. சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் இன்று நடக்கும் அத்தனை விஜய் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்திலும் அவர்தான் தலைமை விருந்தினர். எல்லா இடங்களிலும் அப்படியொரு கூட்டம்... ரசிகர்களும் பணத்தை தண்ணீரார செலவழிப்பதைப் பார்க்க முடிந்தது!

பரவாயில்லை... பக்கா ப்ளானோடதான் நடக்குது... அம்மா வெகுண்டெழாத வரைக்கும் ஆபத்தில்ல!

Posted by: Shankar
 

Post a Comment