டாம் குரூஸ் இளமை ரகசியம்.. நைட்டிங்கேல் பறவையின் எச்சம்!

|

Tom Cruise Uses Ice Suit Muscles   

குளுகுளு என்று ஐஸ் க்யூப் நிறைந்த கோட்சூட் அணிந்தால் எப்படி இருக்கும்? நினைக்கும் போதே ஜில்லென்ற à®'ரு உணர்வும் புத்துணர்ச்சியும் ஏற்படுகிறதல்லவா? அதுபோன்ற உடையைத்தான் அணிகிறாராம் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ்.

‘மிஷன் இம்பாஸிபில் - கோஸ்ட் ப்ரொடோகால்' திரைப்படத்தில் அதிரடி ஆக்ஷன் சண்டைக் காட்சிகளில் நடித்தும் அசராமல் புத்துணர்ச்சியோடு இருப்பார் டாம். 49 வயதான டாம் குரூஸ் இன்றைக்கும் அழகோடும் இளமையோடும் இருப்பதற்கான காரணம் குறித்து ஊடகங்களில் பல்வேறு கிசுகிசுக்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

புதிய திரைப்படமான Rock of Ages ல் டாம் குரூஸ் கூடுதல் கவர்ச்சியோடும் அழகோடும் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த புதிய திரைப்படத்தில் நடிப்பதற்காக ஜப்பானிய பாரம்பரிய ஸ்டைலில் நைட்டிங்கேல் பறவையின் எச்சம், நெல் உமி, தண்ணீர் கலந்த கலவையை கொண்டு பேஸ் மாஸ்க் போட்டு தனது முகத்தை அழகு படுத்தியிருக்கிறாராம். டாம்.

அதைத் தவிர எப்பொழுதும் தான் புத்துணர்ச்சியோ திகழ ஐஸ்கியூப் நிரம்பிய ஆடையை அணிந்திருப்பாராம். இதனால் தசைகளில் குளிர்ச்சியான ஐஸ் தீண்டுவதால் களைப்பு தெரியாமல் எப்பொழுதும் புத்துணர்ச்சியோடு இருக்க முடிகிறது என்கின்றனர் அவரின் ஆடை வடிவமைப்பாளர்கள்.

 

Post a Comment