சார்மிளாவிற்கு அடித்த லக்!

|

Sharmila Gets Lucky With Captan Tv
ஒயிலாட்டம் படத்தில் ஒயிலாக வந்த நடிகை சார்மிளாவை நினைவிருக்கிறதா? மலையாள நடிகையான சார்மிளாவை பாபு ஆன்டனி என்ற வில்லன் நடிகரை காதலித்து, அந்தக் காதல் நிறைவேறாத சோகத்தில் தற்கொலைக்கு முயன்று, ஒட்டுமொத்த திரையுலகின் அனுதாபத்தை சம்பாதித்தவர்.

கொஞ்ச காலம் மீடியாக்களின் கண்களில் சிக்காமல் ஒதுங்கியிருந்த அவர் கம்ப்யூட்டர் என்ஜினியரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் பெரிய கேரக்டர்கள் கிடைக்காத காரணத்தால் சின்னத் திரைக்கு வந்தார். இப்போது கேப்டன் டிவியில் இன்னொரு பொறுப்பான பதவி கிடைத்திருக்கிறதாம். 'கேப்டன் டிவி' நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களில் முக்கிய இடத்தை அளித்திருக்கிறார் சார்மிளாவுக்கு. கேப்டன் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. பம்பரமாகச் சுழன்று வேலை பார்க்கும் சார்மிளா, முன்னணி சேனல்களுக்கு சவால் விடுகிற மாதிரி புதுப்புது நிகழ்ச்சிகளுக்கு ஐடியா கொடுக்கிறாராம்.

சார்மிளா என்றாலே சார்மிங் என்பதை நிரூபித்து விட்டார் என்றே மீடியா உலகில் பேச்சு அடிபடுகிறது.
 

Post a Comment