நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமுதா ஒரு ஆச்சர்யக்குறி! சீரியல் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார் ரேணுகா. இந்த சீரியலில் கதாநாயகி அமுதாவாக போல்டாகவும் எதைப்பற்றியும் கவலைப்படாமலும் இருக்கும் கதாபாத்திரம் அவருக்கு.
அம்மா கதாபாத்திரத்திற்கு கூப்பிட்டவர்களுக்கு மத்தியில் இயக்குநர் பாலசந்தர் கதாநாயகி கதாபாத்திரம் அளித்துள்ளார். சீரியல் பற்றி விமர்சனம் நல்ல முறையில் வருவதில் மகிழ்ச்சிப் பூரிப்பில் இருந்த அமுதாவிடம் (ரேணுகா) பேசினோம்.
பாலசந்தரின் சஹானா தொடருக்குப் பிறகு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பாலச்சந்தர் சாரோட தொடர்ல நடிக்கிறேன். முதல் வார எபிசோடை பார்த்துட்டு இப்படி ஒரு அமுதா கேரக்டராதான் நாங்களும் மாறணும்ங்கிற அளவிற்கு உன் கேரக்டர் தூள் அப்படின்னு ப்ரெண்ட்ஸ் எல்லோரும் போன் பண்றாங்க என்று பூரிப்போடு தொடங்கினார் ரேணுகா.
சம்சார சங்கீதம் படத்தில அறிமுகமாகி, 80க்கும் மேற்பட்ட மலையாள படங்கள்ல நடித்து கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு மேல என்னோட மீடியா கேரியர் போயிட்டு இருக்கு. சினிமாவோ, சீரியலோ நல்ல நடிகைன்னு பெயரெடுத்த திருப்தி இருக்கு என்றார்.
ஒரு சின்ன தகவல் ரேணுகாவும் அவரது கணவரும் சென்னை கடற்கரை சாலையில் ஜி.டி அலோகா வித்யா மந்திர் என்ற பெயரில் சி.பி.எஸ்.சி பள்ளி நடத்துகிறார்களாம். அது முழுக்க முழுக்க கணவரின் நிர்வாகம்தானாம். சைதாப்பேட்டையில் குழந்தைகளுக்கு அபாகஸ் கற்றுக்கொடுக்கும் சைனீஸ் பள்ளியும் நடத்துகின்றனராம்.
Post a Comment