சங்கத்தமிழ் பாடல்களை எளிய தமிழ்நடையில் கேட்க வேண்டுமா? ஞாயிறுக்கிழமை இரவு பத்துமணிக்கு கலைஞர் தொலைக்காட்சி பார்க்கலாம்.
இலக்கிய பாடல்களை எளிய தமிழ் நடையில் டாக்டர் கலைஞர் வழங்குகிறார். நிகழ்ச்சியின் தலைப்பிற்கு ஏற்ப கலைஞர் கருணாநிதியிடம் இருந்து வார்த்தைகள் தமிழருவியாய் கொட்டுகின்றன
இரும்பொறை மன்னன் துயிலும் முரசுக் கட்டில் என அறியாது அதில் படுத்து துயின்றார் புலவர் மோசிகீரனார் இரும்பொறை மன்னனோ அவர் தூக்கம் கலைக்க விரும்பாமல் குளிர்சாமரம் வீசி தமிழுக்கு தொண்டு செய்தான். சங்கப்புலவர் மோசி கீரனார் பாடிய புறநூனுற்றுப்பாடலில் இந்த சம்பவம் அவரால் பாடலாக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பாடலின் சாராம்சத்தை எளிய தமிழ் நடையில் கலைஞர் வழங்கினார்.
அதேபோல் புலியை முறத்தால் விரட்டிய வீரப் பெண்ணின் பெருமையை இனிமையாய், எளிமையாய் எடுத்துரைத்தார் கலைஞர்.
இன்றைய தொகுப்பாளர்கள் அவரிடம் டியூசன் கற்றுக்கொண்டார் தமிழாவது தப்பிப் பிழைக்கும்.
Post a Comment