காமெடி நடிகர்களுக்கு நான் ரசிகை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சீரியஸான வேடங்களில் நடித்தாலும் காமெடி நடிகர்களுக்கு நான் ரசிகை என்றார் அசின். இது பற்றி அசின் கூறியதாவது: நடிப்பில் உள்ள ஆர்வத்தைவிட அதிகபட்ச ஆர்வம் புத்தகம் படிப்பதில்தான் இருக்கிறது. எந்த புத்தகம் கிடைத்தாலும் படித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டேன். கதைகள், தத்துவம், பொழுதுபோக்கு என எல்லா வகை புத்தகங்களும் படிப்பேன். குறிப்பாக காமெடி கதை அம்சம் கொண்ட புத்தகம் என்றால் உயிர். படிக்கும் ஆர்வம் சிறுவயதிலிருந்து என் உடலில் ஊறி இருக்கிறது. எனக்கு நண்பர்கள் குறைவு. எனவே எனது பெரும்பாலான நேரத்தை புத்தகம் படிப்பதில்தான் செலவிடுவேன். இப்போதுகூட எங்காவது பயணம் புறப்பட்டால் என் துணையாக வருவது புத்தகம்தான். எந்த ஏர்போர்ட்களில் இறங்கினாலும் உடனே புத்தக கடைக்கு செல்வேன். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள புத்தக கடையில் என்னை அடிக்கடி பார்க்கலாம். அங்கு வேலை செய்யும் எல்லோரையும் எனக்கு தெரியும். நான் வருகிறேன் என்று தெரிந்தால் காமெடி கதைகள் அடங்கிய புத்தக தொகுப்பை தயாராக எடுத்து வைத்துவிடுவார்கள். படங்களில் சீரியஸான வேடங்களில் நடிக்கிறேன். நிஜத்தில் நான் காமெடி பட ரசிகை. படங்களில் வரும் காமெடி நடிகர்களுக்கு நான் எப்போதும் ரசிகை. இவ்வாறு அசின் கூறினார்.


 

Post a Comment