மீன்கொத்தி - அழகன் தமிழ்மணி மகன் அஜய் கிரு ஹீரோவாகிறார்!

|

Azhagan Tamil Mani Launch His Son Hero
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான அழகன் தமிழ்மணியின் மகன் அஜய் கிரு ஹீரோவாக அறிமுகமாகிறார். படம் மீன்கொத்தி.

அன்புள்ள ரஜினிகாந்த், தர்மபத்தினி, சோலைக்குயில், சித்திரைப் பூக்கள் உள்பட பல படங்களைத் தயாரித்தவர் அழகன் தமிழ்மணி. நான் கடவுள் மூலம் குணச்சித்திர நடிகரானார். அழகர்சாமியின் குதிரையில் அவர் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இப்போது தன் மகனும் ஓஏகே தேவரின் அஜய் கிருவை ஹீரோவாக வைத்து புதிய படம் தயாரிக்கிறார். மீன்கொத்தி என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தனது நாச்சியாரம்மன் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.

அஜய் கிருவுக்கு ஜோடியாக ஷோபனா நாயுடு நடிக்கிறார். இவர் மூன்று தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.

கஞ்சா கருப்பு, ரமேஷ் கண்ணா, காதல் சுகுமார், நிகிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தினா இசையமைக்கிறார். மறைந்த சந்திரபோஸின் மகன் போஸ் சந்தோஷ் பின்னணி இசையை கவனிக்கிறார்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சஞ்சய் ராம்.

ஆக்ஷன் கலந்த குடும்பப் படமாக உருவாகியுள்ள மீன்கொத்தியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் வெளியாகிறது!
 

Post a Comment