மோசடி வழக்கு.. கோர்ட் வளாகத்தில் நடந்த 'பவர் (ஸ்டார்)' மோதல்!

|

Sivakasi Court Action Packed When Power Star Arrived    | ஆனந்த தொல்லை  
சிவகாசி: நிதி மோசடி வழக்கில் சிவகாசி நீதிமன்றத்தில் பவர் ஸ்டார் ஆஜராக வந்தபோது அங்கு அவரது ஆதரவாளர்களுக்கும், மனுதாரரின் ஆட்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

லத்திகா என்ற படத்தை தயாரி்த்து, இயக்கியதுடன் தானே ஹீரோவாகவும் நடித்து நானும் இருக்கிறேன் என்று நிரூபித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். சாதாரண சீனிவாசனாக இருந்த அவர் தன் பெயருக்கு முன்னால் பவர் ஸ்டார் என்னும் பட்டத்தை தானாகவே சேர்த்துக் கொண்டார்.

அவர் பிரபலமாக ஃபேஸ்புக், யூ டியூப் ஆற்றிய பங்கு கொஞச, நஞ்சமல்ல. சளைக்காமல் படங்கள் எடுத்து நடிக்கும் அவர் அடுத்ததாக ஆனந்த தொல்லை என்ற படத்தின் மூலம் நம்மையெல்லாம் விரைவில் சந்திக்கவிருக்கிறார்.

தாஸ் என்பவரிடம் பவர் ஸ்டார் சீனிவாசன் \ரூ. 9 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிவகாசி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக சீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் அவரது ஆதரவாளர்களுக்கும், தாஸின் ஆட்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து மோதலில் ஈடுபட்ட அனைவரையும் கூண்டோடு அள்ளிக் கொண்டு போய் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Post a Comment