விஜய் பிறந்த நாள் - அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்!

|

Vijay Distribute Free Gold Rings Children

தனது பிறந்த நாளையொட்டி, அரசு மருத்துவமனையில் நாளை பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம் அளிக்கிறார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய் பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. நாளை காலை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு விஜய் செல்கிறார். அங்கு நாளை பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் விஜய் தங்க மோதிரம் அணிவிக்கிறார்.

இங்குதான் விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

நீலாங்கரையில் ரசிகர்களின் ரத்தான முகாம் நடக்கிறது. இலவச மருத்துவ முகாமும் நடக்கிறது. எஸ்.ஏ. சந்திரசேகரன் தொடங்கி வைக்கிறார்.

வேளச்சேரி பகுதி விஜய் ரசிகர் மன்றம் சார்பில் திருவான்மியூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது.

சின்மயாநகர் குழந்தை ஏசு கோவிலில் முதியோருக்கு அன்னதானம், வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன.

கொருக்குப்பேட்டை மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

புரசைவாக்கம், கோடம்பாக்கம் பகுதி ரசிகர்களும் அந்தந்த பகுதி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குகிறார்கள்.

இந்நிகழ்ச்சிகளில் எஸ்.ஏ. சந்திரசேகரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் ஆனந்த், செயலாளர் ரவிராஜா, துணை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் எல்.குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

 

Post a Comment