மலையாளப் படங்களில் வில்லனாக நடித்தவர் சுதிர் சுகுமாறன். தற்போது வினயன் இயக்கி வரும் டிராகுலா 2012 என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நம்பியார் நடித்து வருகிறார். இந்நிலையில் சுதிர் ராஜேஸ்வரியிடம் தான் அவரை காதலிப்பதாகவும், மணக்க விரும்புவதாகவும் தெரிவித்து வந்துள்ளார். அதற்கு ராஜேஸ்வரி கண்டும் காணாததுமாய் இருந்துள்ளார்.
தொல்லை அதிகமாகவே அவர் தனது தாயிடம் இது குறித்து தெரிவித்தார். அவரது தாய் நேராக சுதிர் வீட்டுக்கு சென்று அவர் மனைவியிடம் இந்த விவகாரத்தை தெரிவி்த்து எச்சரித்துவிட்டு வந்துள்ளார். ஆம், சுதிருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
ராஜேஸ்வரியின் தாய் வந்து எச்சரித்துவிட்டு போனது பற்றி அறிந்த சுதிர் ஆத்திரமடைந்தார். கடந்த வியாழக்கிழமை ராஜேஸ்வரி காரில் சென்றபோது பைக்கில் வந்து அவரது காரை வழிமறித்த சுதிர் ராஜேஸ்வரியை திட்டி, தாக்கியுள்ளார். இதையடுத்து ராஜேஸ்வரி திருப்போணித்தரா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்தார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
டிராகுலா படப்பிடிப்புக்காக ருமேனியா சென்றபோது சுதிர் பலமுறை என்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி தொந்தரவு செய்தார். சம்பவத்தன்று நடன வகுப்பு முடிந்து காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தேன். அப்போது எனது காரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த சுதிர் வழிமறித்து நிறுத்தினார். காரில் இருந்து என்னை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து ஆபாச வார்த்தை கூறி தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு திருப்போணித்துராவில் இருந்து கடவன்தரா காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருக்கும் சுதிரை உடனடியாக கடவன்தரா காவல் நிலையத்தில் சரண் அடையுமாறு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
Post a Comment