தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்!

|

Tamil Selvanum Thaniyar Anjalum Shooting

கவுதம் மேனன் பங்குதாரராக உள்ள போட்டோன் கதாஸ் தயாரிக்கும் புதிய படமான தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படம் தமிழ் தெலுங்கில் இருமொழிப் படமாக தயாராகிறது.

ஏற்கெனவே இந்த நிறுவனம் இசை ஞானி இளையராஜா இசையில் உருவாகும் "நீதானே என் பொன்வசந்தம்" படத்தையும், அதை தெலுங்கில் "எதோ வெல்லி போயிந்தே மனசு" என்ற பெயரிலும் தயாரித்து வருகிறது.

"தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்" படத்தை பிரேம் சாய் இயக்குகிறார். இவர் பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்தவர். இதே படம் தெலுங்கில் கூரியர் பாய் கல்யான் என்ற பெயரில் உருவாகிறது.

"இப்படத்தின் மைய கரு எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியையோ, மொழியையோ சார்ந்தது அல்ல, ஒரு நல்ல ஜனரஞ்சகமான நகைச்சுவை, காதல், ஆக்ஷன், என்ற கலவையுடன் பின்னபட்ட திரைக்கதையுடன் கூடியது. இக்கதையை நான் கேட்ட போது பல இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்த சிரமபட்டேன்" என்கிறார் இயக்குநர் கவுதம்மேனன்.

ரிச்சா கங்கோபாத்யாய் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ஜெய், சந்தானம், வி.டி.வி. கணேஷ் நடிக்கின்றனர். பிரபல பாடகர் கார்த்திக் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த 3 மாதங்களுக்கு ஹைதராபாதில் தொடர்ந்து நடக்கிறது.

 

Post a Comment