முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென்னுக்கு 36 வயதாகியும் இன்னும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் ரினி, அலிஷா என்ற 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஐ ஆம் ஷீ என்ற அமைப்பைத் துவங்கி நடத்தி வருகிறார். அந்த அமைப்பு நடத்தும் அழகிப் போட்டியில் வெற்றி பெறுவர்கள் பிரபஞ்ச அழகி, மிஸ் ஏசியா பசிபிக் அழகிப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்பார்கள்.
அப்படி அவர்கள் அனுப்பி வைத்த ஹிமாங்கினி சிங் மிஸ் ஏசியா பசிபிக் 2012 அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.
இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுஷ்மிதா சென் கூறுகையில்,
ஹிமாங்கினி மிஸ் ஏசியா பசிபிக் அழகிப் பட்டம் வென்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நான் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன். என்னை மணக்க நிறைய பேர் வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் திருமணத்திற்கு முன்பு முடிக்க வேண்டிய வேலைகள் சில உள்ளது.
நான் மீண்டும் படங்களில் நடிக்கப் போகிறேன். எனது படம் குறித்த அறிவிப்பு அக்டோபர்-டிசம்பரில் வெளியாகும். டிவி ஷோ ஒன்று நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. என்னுடைய ஐ ஆம் ஷீ அமைப்பின் பேஷன் வீக் உள்ளது. இதையெல்லாம் முடித்தவுடன் திருணம் தான் என்றார்.
கடந்த 2 ஆண்டுகளாக சுஷ்மிதா படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment