மோகன்லால் போதை போஸ்டருக்கு தடை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிகரெட் பிடிப்பதுபோல ஒட்டப்பட்ட விஜய் பட போஸ்டருக்கு தடை விதித்ததுபோல் மோகன்லால் போஸ்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் 'துப்பாக்கி'. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் சென்னையில் ஒட்டப்பட்டன. அதில் விஜய் சிகரெட் புகைக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை வாலிபர் ஒருவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து அந்த போஸ்டர்கள் நீக்கப்பட்டது.

மோகன்லால் நடித்துள்ள படம் 'ஸ்பிரிட்'. ரஞ்சித் இயக்குகிறார். இதில் மோகன்லால் எப்போதும் குடிபோதையில் இருப்பதுபோன்று மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இப்படத்திற்கான போஸ்டர்கள் கேரளாவில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டது. ஒரு கையில் மது பாட்டிலும், மறு கையில் சிகரெட்டுமாக போஸ் கொடுத்தபடி மோகன்லால் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அத்தகைய போஸ்டர்களை அகற்றும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.


 

Post a Comment