எந்த மொழியிலயும் எனக்குப் பிடிக்காத வார்த்தை 'ஐட்டம்'! - அசின்

|

Asin Hates The Word Item

ஐட்டம் என்ற வார்தையே எனக்குப் பிடிக்காது என்கிறார் நடிகை அசின்.

பக்கா இந்தி நடிகையாகவே மாறிவிட்டார் அசின். அவரது அடுத்த படம் அக்ஷய் குமாருடன் கிலாடி 786.

படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. அசினும் பேச ஆரம்பித்துள்ளார். விளம்பரம் வேணுமில்லையா!

தென்னிந்திய படங்களைப் பற்றி பேச்செடுத்தாலே எரிந்து விழுகிறார் அசின். ஏன் இந்த கோபம்..? வளர்த்துவிட்ட படவுலகை வறுத்தெடுப்பது ஏனோ? என நிருபர்கள் அவரிடம் கேட்டனர்.

"அப்படி எந்த கோபமும் இல்லை. ஆனால் நான் இந்த அளவு பெரிய நடிகை ஆன பிறகும், என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் ரொம்ப சில்லியான ஸ்கிரிப்டுகளோடுதான் வருகிறார்கள். அல்லது நான் ஏற்கெனவே நடித்த பாத்திரங்களை ரிபீட் செய்வது போல கதைகளோடு வருகிறார்கள். அதான் எரிச்சலாக உள்ளது," என்றவரிடம், பெரிய படங்களில் ஐட்டம் நம்பர் வந்தால் ஒப்புக் கொள்வீர்களா? என்று கேட்டனர்.

உடனே கடுப்பான அசின், "எனக்கு பிடிக்காத வார்த்தை இந்த ஐட்டம். இந்தியில் என்றல்ல, எந்த மொழியிலும் இப்படி நடிக்க எனக்குப் பிடிக்காது," என்றார்.

 

Post a Comment