கன்னடத்தில் இந்தி நடிகை வீணா மாலிக் சில்க்காக நடிக்கிறார். தி டர்ட்டி பிக்சர்: சில்க் சக்கத் மகா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை த்ரிஷுல் இயக்குகிறார். இந்த படத்தில் இந்தியில் நஸீருத்தீன் ஷா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க பார்த்திபனை கேட்டுள்ளனர். அவரும் ஓ.கே. சொல்லிவிட்டாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று இயக்குனர் தெரிவித்தார்.
பார்த்திபனை இந்த படத்தில் நடிக்க வைப்பதில் தனது குழுவுக்கு மிகவும் மகிழ்ச்சி என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மையில் இந்த படத்திற்காக வீணா மாலிக் போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அதில் வீணா கவர்ச்சியாக இருந்தாலும் வித்யா பாலன் அளவுக்கு எபெக்ட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்காக வீணாவுக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
Post a Comment