இனிமேல் எனக்கு 'ஐட்டம்' வேண்டாம்... 'ரேணிகுண்டா' சஞ்சனா சிங்!

|

No More Item Numbers Renigunta Star   

ரேணிகுண்டா படத்தில் கலக்கலான கவர்ச்சி வேடத்தில் அறிமுகமாகி, பின்னர் குத்துப்பாட்டுக்களில் புகுந்த சஞ்சனா சிங் இனிமேல் தான் அதுபோல நடிக்கப் போவதில்லை, ஆடப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

ரேணிகுண்டா படத்தில் விபச்சாரப் பெண்ணாக நடித்திதருந்தார் சஞ்சனா சிங். பின்னர் குத்துப் பாட்டுகளுக்கு ஆடி வந்த அவர், சமீபத்தில் வெளியான மறுபடியும் ஒரு காதல் படத்திலும் களேபரமான ஆட்டத்தைப் போட்டிருந்தார். இருப்பினும் இனிமேல் குத்துப்பாட்டுகளுக்கு ஆடப் போவதில்லை என்று டிக்ளேர் செய்துள்ளார் சஞ்சனா.

சஞ்சனா சிங்கின் நடிப்பில் ரகளைபுரம், ரெண்டாவது படம், வெற்றிச் செல்வன் என படங்கள் அணிவகுத்து நிற்கின்றனவாம். தனக்குள் இருக்கும் நல்ல நடிகையை வெளிக் கொணருவதில்தான் இப்போதைக்கு சஞ்சனாவின் ஒரே லட்சியமாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், முதலில் நான் எல்லோருக்கும் தெரிந்த பெண்ணாக மாற வேண்டும் என்று விரும்பினேன். இதனால்தான் குத்துப் பாட்டுக்கள் என்னைத் தேடி வந்தபோது அதை நான் தட்டவில்லை. இப்போது எல்லோருக்கும் தெரிந்த முகமாகி விட்டேன். எனவே மறுபடியும் குத்துப்பாட்டுக்களுக்குப் போக விரும்பவில்லை என்றார்

ரகளைபுரத்தில் கான்ஸ்டபிள் வேடத்தில் வருகிறாராம். கருணாஸை விழுந்து விழுந்து காதலிப்பவராக வருகிறாராம். மேலும் படத்தில் காமெடியிலும் கலக்கியுள்ளாராம் சஞ்சனா சிங்.

அதேபோல ரெண்டாவது படம் படத்தில் அரசியல்வாதி வேடமாம். கஞ்சா கருப்புடன் இணைந்து வெற்றிச்செல்வனில் காமெடி செய்துள்ளாராம். அப்படத்தில் அவர் தொழிலதிபராக வருகிறாராம். அவரைக் கவரை கடுமையாக முயற்சிப்பவராக வருகிறாராம் கஞ்சா கருப்பு.

இதுபோல அமளிதுமளி என்ற படத்தில் 2வது நாயகியாகவும் நடிக்கிறாரம் சஞ்சனா சிங்.

 

Post a Comment