'நான் ராஜாவாகப் போகிறேன்' - சாந்தினிக்கு கிடைத்த 'பிரேக்!'

|

Santhini Naan Raajavaaga Pogiren
இயக்குநர் கே.பாக்யராஜின் அறிமுகங்கள் சோடை போனதில்லை. இதற்கு முந்தைய உதாரணங்கள் அம்பிகா, ஊர்வசி, சுலக்ஷனா, கல்பனா என நிறைய பேரைச் சொல்லலாம்.

பாக்யராஜின் 'சித்து +2' வில் அறிமுகமானவர் சாந்தினி. சொல்லிக் கொள்கிற நடிப்பு வாய்ப்புள்ள படங்களாக மட்டும் தேர்வு செய்து à®"சைப்படாமல் முன்னேறி வருகிறார்.

விஸ்காம் மாணவி சாந்தினி. முதல்படம் வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியாக அமையாவிட்டாலும், இவரது நடிப்புக்கு ஏக பாராட்டுக்களாம்.

"முதல் படத்திக்குப் பின் விளம்பர வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தன. நான் நடித்த இரண்டாவது படம் 'படித்துறை' படப்பிடிப்பு முடிந்துவிட்டது. முதல் படத்துக்கு மாறாக கிராமத்துப் பெண் வேடம். இதற்கிடையே ஏகப்பட்ட விளம்பரங்கள் வந்தன.

குறிப்பாக போத்தீஸ் விளம்பரங்களில் பிரபல முகமாகிவிட்டேன். சிங்கப்பூர்,துபாய் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விளம்பர மாடலிங் செய்து விட்டேன்.

போத்தீஸ் விளம்பரம் பார்த்து மூன்று படங்கள் வந்துள்ளன. தமிழில் நகுலுடன் 'நான் ராஜாவாகப் போகிறேனில் நடிக்கிறேன். இதை இயக்குபவர் ப்ருத்வி. இவர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர். இப்படத்துக்கு வெற்றி மாறன்தான் வசனம் எழுதுகிறார். இதுதவிர இரண்டு தெலுங்குப் பட வாய்ப்புகள்.

'நான் ராஜாவாகப் போகிறேன்' வித்தியாசமான ஆக்ஷன் படம். இதில் நான் சட்டக் கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். திருநெல்வேலி ஸ்லாங் பேசும் என் கேரக்டர். 'புதுசாக இருக்கும்'," என்கிறார் சாந்தினி.

சாந்தினியைப் பார்க்கும் பலரும் கேட்கும் கேள்வி... 'நீங்கள் நடிகை ஜெனிலியா போலவே இருக்கிறீர்களே...? என்பதுதானாம்.

இதுபற்றி அவர் கூறுகையில், "எனக்கு இதைக் கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது," என்கிறார்.
 

Post a Comment