அன்பான அக்கா நான்: டான்ஸ் மாஸ்டர் கலா

|

Mm Director Dance Master Kala

சினிமாவில் நடன இயக்குநர் சின்னத்திரையில் மானாட மயிலாட நிகழ்ச்சியின் இயக்குநர் என பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறது நடன இயக்குநர் கலாவின் வாழ்க்கை. மனோரமாவை திரையுலகில் ஆச்சி என்று அழைப்பது போல, நடன இயக்குனர் கலாவை எல்லோரும் அக்கா என்றே அழைக்கிறார்கள். எம்.எம் சீசன் 7ல் பிஸியாக இருந்த கலா மாஸ்டரை நமக்காக பத்து நிமிடம் ஒதுக்கச் சொன்னோம்.

"புதுப்புது அர்த்தங்கள்' படம் தொடங்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட 350 படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி உள்ளேன். இப்போது எம்.எம் சீசன் 7 வரை போய் கொண்டிருக்கிறது. என்னை எல்லோரும் மாஸ்டர் என்று அழைப்பதை விட "அக்கா' என்று அழைப்பதையே விரும்புகிறேன். அக்கா என்பதிலேயே இடைவெளி இல்லாத நெருக்கம் இருக்கும் என்று கூறி தொடர்ந்தார்.

நடனத் துறைக்கு பெண்கள் அதிகளவில் வருகிறார்கள். ஆனால் அவர்கள் நிலைத்திருக்க விரும்புவதில்லை. திருமணம் வரைக்கும் இருப்போம் என்கிற நினைப்போடு வந்து போய்விடுகின்றனர். இந்தத் துறையில் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். முன்புபோல இந்தத் துறைக்கு வந்தால் ஏழ்மையாகவே இருப்பார்கள் என்பதெல்லாம் இல்லை.

கலைஞர் டிவி தொடங்கும் போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிக வரவேற்பு இருந்தது. அதன் அடிப்படையில் மானாட மயிலாட தொடங்கினோம். அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது அதுதான் சீசன் 7 வரை தொடர காரணமாக இருக்கிறது. மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆடுவதற்கு திறமை இருப்பவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறோம் என்றார். எங்களுடையை நிகழ்ச்சியில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை கெமிஸ்ட்ரி. இப்பொழுது அது பலரும் பொதுவாக பயன்படுத்தும் வார்த்தையாக மாறிவிட்டது.

இது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் நீதிபதிகளுக்கு இடையே சண்டை போடுவது டி.ஆர்.பி.ரேட்டிங்கிற்காக சிலர் செய்கிறார்கள். இந்நிகழ்ச்சிக்கு நான்தான் இயக்குனர். என் நிகழ்ச்சியில் இந்த ஏமாற்று செய்கை இருக்காது. குஷ்பு, ரம்பா, நான் மூவருமே நல்ல தோழிகள். எங்களிடையே சண்டையே வராது!. எங்களின் தீர்ப்பும் சரியாக இருக்கும் அதனால்தான் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடர காரணமாக இருக்கிறது என்று கூறி நிகழ்ச்சிக்கு கிளம்பினார் கலா மாஸ்டர்.

 

Post a Comment