இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு நேற்று முன்தினம் 69-வது பிறந்த நாள், இதையொட்டி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இசை தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு புதிய இணையதளம் ஒன்றை தொடங்க இருக்கிறேன். என் பெயரில் மற்றவர்கள் ஏற்கனவே இணையதளம் நடத்தி வந்தாலும் இது எனது தனிப்பட்ட இணையதளமாக இருக்கும். இதில் இசை குறித்த சந்தேகங்களை யாரும் கேட்கலாம். அதற்கு பதில் சொல்வேன். கற்பிப்பதற்கும், நான் கற்றுக் கொள்வதற்கும் இதை தொடங்கியிருக்கிறேன். எனது இசை வாரிசுகளும் இதில் பங்கேற்பார்கள். எனக்கு தெரிந்த இசை என்னோடு போய்விட நான் விரும்பவில்லை. அதை மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டுச் செல்ல விரும்புகிறேன். 950 படங்களுக்கு நான் இசை அமைத்திருப்பது இசை என்ற விருந்தில் வத்தலும் ஊறுகாயும் மட்டுந்தான். சோறு போடவே இல்லை. இவ்வாறு அவர் கூறினார். கார்த்திக் ராஜா, பவதாரிணி உட்பட பலர் உடன் இருந்தனர்.
Post a Comment