நல்லு ஸ்டூடியோஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் படம், 'ஆதலால் காதல் செய்வீர்'. சுசீந்திரன் எழுதி இயக்குகிறார். போக்கிரி ரமேஷ் பாபு மகன் சந்தோஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மனிஷா யாதவ் ஹீரோயின். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சூர்யா ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் வாலி, யுகபாரதி. இதில் 28 வருடங்களுக்குப் பிறகு பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது: தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 70 படங்களுக்கு மேல் நடித்தேன். ரஜினியுடன் நடித்த 'தங்க மகன்' மற்றும் 'விதி', 'டார்லிங் டார்லிங்' உட்பட பல படங்கள் என்னை அடையாளம் காட்டின. 84- ல் பிரபுவுடன் நடித்த 'உங்க வீட்டு பிள்ளை' என் கடைசி படம். பிறகு பாக்யராஜை திருமணம் செய்துகொண்டு, நடிப்புக்கு முழுக்கு போட்டேன். இப்போது சுசீந்திரன் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கும்படி கேட்டார். பாக்யராஜும், சாந்தனுவும் மீண்டும் என்னை நடிக்கச் சொல்லிக்கொண்டிருந்தனர். ஒப்புக்கொண்டேன். இவ்வாறு பூர்ணிமா கூறினார்.
Post a Comment