தென்னிந்திய நடிகைகளை குடிகாரர்கள் என்பதா? - சனாகானுக்கு த்ரிஷா கண்டனம்

|

Trisha Condemns Sana Khan    | சனாகான்  

பாலிவுட் நடிகைகளை விட தென்னிந்திய நடிகைகள் அதிகம் குடிப்பதாகக் கூறிய நடிகை சனாகானுக்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். தன் கண்டனத்தை உதவியாளர் மூலம் நடிகர் சங்கத்திலும் பதிவு செய்துள்ளாராம்.

சிம்பு ஜோடியாக 'சிலம்பாட்டம்' படத்தில் அறிமுகமான சனாகான், சில படங்களுக்குப் பின் மலையாளத்துக்குப் போய், à®'ரு படத்தில் சில்க் வேடத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சென்னை வந்த சனாகான் தென்னிந்திய நடிகைகள் மது அருந்துவதாக பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.

சில நடிகைகள் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு தள்ளாடிக்கொண்டு போவதை நான் பார்த்து இருக்கிறேன். சிகரெட் கூட பிடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை மறைக்கிறார்கள்.

நான் குடிப்பதில்லை. வருடத்தில் முப்பது நாட்கள் விரதம் இருக்கிறேன். தினமும் தொழுகை நடத்துகிறேன். சிகரெட் பிடிப்பது போன்ற பழக்கங்கள் எனக்கு கிடையாது என்று கூறியிருந்தார்.

இதற்கு தென்னிந்திய நடிகைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செல்போனில் தொடர்பு கொண்டு தமிழ் நடிகைகள் பலர் கடுமையாக எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவதூறாக பேட்டி அளித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர். சிலர் எஸ்.எம்.எஸ். அனுப்பியும் கண்டித்துள்ளனர்.

பிரபல நடிகை த்ரிஷாவும் சனாகானை கண்டித்துள்ளார். அவர் மேல் நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி தனது உதவியாளர் மூலம் நடிகர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார் என்று தெரிகிறது.

 

Post a Comment