நியூசிலாந்தில் ஹனிமூன் கொண்டாடிவிட்டு சினேகா- பிரசன்னா சென்னை திரும்பியுள்ளனர். இதுபற்றி பிரசன்னாவிடம் கேட்டபோது கூறியதாவது: மே 11 திருமணத்துக்குப் பிறகு சினேகாவுக்கு 'ஹரிதாஸ்' ஷூட்டிங் இருந்தது. இதற்கிடையே கிடைத்த ஓய்வில், நியூசிலாந்து சென்றோம். அங்கு இரண்டு வாரங்கள் தங்கி இருந்தோம். இப்போது சென்னை திரும்பியுள்ளோம். அடுத்து 'முரண்' ராஜன் மாதவ் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அதற்குமுன், மலையாளத்தில் வந்த 'டிராபிக்' தமிழ் ரீமேக்கில் நடிக்கிறேன். சரத்குமார், பிரகாஷ்ராஜ் நடிக்கும் இதில் எனக்கு சிறந்த கேரக்டர். 'ஹரிதாஸ்' படத்தில் நடிக்கும் சினேகா முழுமையான இல்லத்தரசியாக மாற ஆசைப்படுவதால் இப்போது எந்தப் படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை.
Post a Comment