ஞாயிறுகிழமை வந்தாலே திரைப்படங்களை ஒளிபரப்புவதில் சேனல்களுக்கு இடையே பெரிய போட்டியே நடக்கும். புதுப்படங்களை போட்டி போட்டு ஒளிபரப்புவார்கள்.
கடந்த சில வாரங்களாக புதிய திரைப்படங்களை விஜய் டிவியுடன் போட்டி போட்டு காலை நேரத்தில் ஒளிபரப்பிய சன் டிவி இந்த வாரம் ஜெயா டிவியுடன் போட்டி போட்டு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை ஒளிபரப்பியது.
ஜெயா டிவியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஒளிபரப்பானது அதே நேரத்தில் சன் தொலைக்காட்சியில் கார்த்தி, ரீமாசென், ஆன்ட்ரியா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ரசிகர்களின் ஆதரவு என்னவோ எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குதான் கிடைத்திருக்கும் என்றாலும் சன் டிவி என்றைக்கு தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ளப்போகிறதோ என்று கேட்கத் தொடங்கியுள்ளனர் தமிழ்நாட்டு ரசிகர்கள்.
+ comments + 1 comments
Sabash sariyana poteeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee.
Post a Comment