த்ரிஷா தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன்: கார்த்திகா

|

Trisha Is My Inspiration Karthika    | கார்த்திகா  

நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவின் இன்ஸ்பிரஷேன் நடிகை த்ரிஷாவாம்.

நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா அறிமுகமானது என்னவோ தெலுங்கில் என்றாலும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது 'கோ' படம் தான். அதைத் தொடர்ந்து அவர் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்த தம்மு ஹிட்டானது. அந்த படத்தில் த்ரிஷாவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திகா பாரதி ராஜாவின் அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தில் நடித்து வருகிறார்.

சுந்தர் சி. யின் எம்.ஜி.ஆர். படத்தில் இருந்து வெளியேறினார். மேலும் சட்டம் à®'ரு இருட்டறை ரீமேக்கில் இருந்தும் வெளியேறிவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தன்னுடைய முன்மாதிரி த்ரிஷா என்று கூறியுள்ளார். à®'வ்வொரு நடிகைக்கும் à®'ரு ரோல் மாடல் இருப்பார்கள். அப்படித் தான் கார்த்திகாவுக்கு த்ரிஷாவாம்.

த்ரிஷா மட்டும் என்ன சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஹீரோயினாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். நல்ல முன்மாதிரி தான்.

 

Post a Comment