வேற்றுகிரகவாசிகள் உண்மையா? அறிவியல் பூர்வமான விளக்கம்!

|

Makkal Tv S Andam Decoding The U

மக்கள் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் மாலையில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `அண்டம்.' நிகழ்ச்சியில் பூமியைப் பற்றியும், வேற்றுகிரகவாசிகளைப் பற்றிய அரிய தகவல்களைப் பற்றியும் அறிவியல் பூர்வமாக விளக்குகின்றனர்

கடந்த சில வாரங்களாக `2012-ல் உலகம் அழியுமா?' என்ற கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களோடு உரிய பதில்கள் இடம் பெற்றன. தொடர்ந்து கோள்கள் பற்றிய அரிய தகவல்களுடன் பூமியை தவிர வேறு எங்கேனும் உயிரினங்கள் உள்ளதா? அவற்றை கண்டுபிடிப்பதற்காக மனிதன் மேற்கொண்ட முயற்சிகள் என்ன? பல ஆண்டுகள் கழித்து மனிதனுக்கு கிடைத்த வேற்றுகிரக வாசிகள் குறித்த சமிக்ஞைகள் உண்மை தானா? இதற்கான பதிலை சரிவர ஆராய்ந்து, தக்க ஒரு தகவலை விளக்கமாக கூற வருகிறது இந்த வார அண்டம்.

அழுகை சீரியல்களைப் பார்ப்பதற்கு பதிலாக குழந்தைகளோடூ அமர்ந்து இது போன்ற அறிய தகவல்களைத் தரும் நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம்.

 

Post a Comment