அண்ணாமலை, பாட்ஷா என்று ரஜினிக்கு மெகா ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இப்போது சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். இயக்குநர் சிகரம் பாலசந்தரிடம் உதவியாளராக பணியாற்றியவர் சுரேஷ் கிருஷ்ணா. நடிகர் கமல்ஹாசன் நடித்த சத்யா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் கிருஷ்ணா தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்திய ஆகிய மொழிகளில் படம் இயக்கியுள்ளார். ரஜினியின் மெகாஹிட் படங்களான அண்ணாமலை, வீரா, பாட்ஷா போன்ற படங்களையும், கமல்ஹாசனின் ஆளவந்தான் போன்ற படங்களையும் இயக்கினார். தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ் ஆகியோரையும் வைத்து நிறைய படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக தமிழில் இளைஞன் படத்தை இயக்கினார். இந்நிலையில் வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைத்ததும், சின்னத்திரையில் களம் இறங்க முடிவெடுத்து இருக்கிறார். விஜய் டி.வியில் ஆஹா என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்ததொடரின் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா தான்.
Post a Comment