ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் ஜே.சதீஷ்குமார் வழங்க, ஏ.வி.ஏ புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.வி.அனூப் தயாரிக்கும் படம், 'ஆரோகணம்'. சரிதா தங்கை விஜி ஹீரோயின். இசை, கே. இணை தயாரிப்பு: சாரதா, ராமகிருஷ்ணன். நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் எழுதி, இயக்குகிறார். இப்படத்தின் பாடலை இயக்குனர்கள் கே.பாலசந்தர், கே.எஸ்.சேதுமாதவன் வெளியிட்டனர். பிறகு கே.பாலசந்தர் பேசும்போது, 'சரிதாவின் தங்கை விஜியை நான்தான் அறிமுகம் செய்தேன். பெரிய கண்கள் மீது எனக்கு ஆர்வம் உண்டு. நான் இயக்கிய 'அக்னி சாட்சி' படத்தில் சிவகுமார், சரிதா நடித்திருந்தனர். குளோஸ்-அப்பில் சரிதாவின் பெரிய கண்கள் இடம்பெற்ற போஸ்டர்கள் பரபரப்பு ஏற்படுத்தின. அதுபோல், 'ஆரோகணம்' படத்தில் விஜியின் கண்கள் பிரமிப்பு ஏற்படுத்தி இருக்கின்றன. விஜி உருவில் சரிதாவை பார்க்கிறேன். இந்த படத்தின் பட்ஜெட்டை கேட்டு ஆச்சரியப்பட்டேன். இதை போல குறைந்த பட்ஜெட்டில் நானும் படம் உருவாக்க ஆசைப்படுகிறேன. ஓடினால், லாபம். இல்லை என்றால், காந்தி கணக்கில் சேர்த்துவிட வேண்டியதுதான்' என்றார். விழாவில் மிஷ்கின், வசந்த், பாண்டிராஜ், மாரிமுத்து, அறிவழகன், ஸ்ரீகாந்த், தலைவாசல் விஜய், ஏ.ஆர்.எஸ்., சச்சு, வடிவுக்கரசி உட்பட பலர் கலந்து கொண்டனர். லட்சுமி ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
Post a Comment