ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு ஆலேசானை தரும் கலைஞர் செய்திகள்

|

A One Stop Solution The Woes Aspiring Ias Students

ஐ.ஏ.எஸ் ஆவது என்பது இன்றைக்கு பெரும்பாலோனோரின் கனவாக, லட்சியமாக இருக்கிறது. இந்த லட்சிய வழியை அடைவதற்கான பாதை தெரியாமல் இருப்பவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்காக `கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சியில், நாள்தோறும் மாலை 4.30 மணிக்கு "ஐ.ஏ.எஸ். ஆவது எப்படி?'' என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

கணேஷ் ஐஏஎஸ் அகாடமியின் தலைவர் கணேச சுப்பிரமணியன் இந்த நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்று ஐ.ஏ.எஸ். ஆவதற்கான வழிமுறைகள் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார். நேயர்களின் சந்தேகங்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் அவர் பதில் அளிக்கிறார்.

யு.பி.எஸ்.சி., தேர்வு முறைகள், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் விதம், தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பாடங்கள், தயார்படுத்திக் கொள்ள வேண்டிய முறைகள், வெற்றிக்கான அடிப்படைகள் போன்றவை குறித்த தகவல்களை இந்நிகழ்ச்சியில் கணேச சுப்பிரமணியன் வழங்குகிறார்.

தற்போது தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் பேர் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக தங்களைத் தயார்படுத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனால் தகுதி, திறமை வாய்ந்த, லட்சக்கணக்கானோர் சரியான வழி தெரியாமல் மத்திய அரசுத் தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதில்லை. எனவே, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதாக கணேஷ் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சி சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

 

Post a Comment