இந்திக்கு போகும் அபியும், நானும்: அப்போ த்ரிஷா?

|

Prakash Raj Turns Director Aamir Khan
பிரகாஷ் ராஜ் தயாரித்து நடித்த படம் அபியும், நானும் இந்திக்கு போகிறது. அங்கு பிரகாஷ் ராஜ் கதாபாத்திரத்தி்ல் ஆமீர் கான் நடிக்கிறார்.

பிரகாஷ் ராஜ் தயாரி்த்து நடித்த படம் அபியும்,நானும். ராதா மோகன் இயக்கிய இப்படத்தில் த்ரிஷா பிரகாஷ் ராஜின் மகளாக நடித்திருந்தார். தமிழில் படம் வெற்றி பெற்றதயைடுத்து கன்னடத்திலும் எடுத்தனர். அங்கு த்ரிஷா நடிக்கவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் மீது பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு ஆர்வம் வந்துள்ளது.

இந்தியில் இந்த படத்தை பிரகாஷ் ராஜ் இயக்குகிறாராம். தமிழில் அவர் நடித்த கதாபாத்திரத்தில் அங்கு ஆமீர் கான் நடிக்கிறார். பிரகாஷ் ராஜூம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அபியாக த்ரிஷாவை ஆமீர் நடிக்க வைப்பாரா அல்லது பாலிவுட் நடிகைகளில் யாராவது ஒருவரை தேர்வு செய்வாரா என்பது தான் கேள்வி.

இந்தியில் அபியும், நானும் படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். அவர் ஏற்கனவே விஜயின் போக்கிரி பட இந்தி ரீமேக்கான சல்மான் கானின் வாண்டட் படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment