அலட்டல் இல்லாத ஆட்டோ ராணி கல்யாணி!

|

Beautiful Character Actress Becomes Auto Driver

"தென்​றல்' தொட​ரில் ஆட்டோ டிரைவர் கல்யாணியாக வந்து ரசி​கர்​கள் மன​தில் இடம் பிடித்தவர் சுசை​னி. மைனாவில் வில்லியாக நடித்து அதிரவைத்தார். சீரியலிலும் சினிமாவிலும் நடிக்கும் ஆசை எப்படி வந்தது என்பது பற்றி அவரிடமே கேட்டு தெரிந்து கொள்வோம்.

நான் வளர்ந்​தது,​​ படித்​த​தெல்​லாம் பெங்​க​ளு​ரில்.​ நான் நடிப்​ப​தற்கு எங்கள் வீட்டினரை சம்​ம​திக்க வைத்​தது ரொம்ப பெரிய கதை.​ ​டிப்ளமோ சாப்ட்​வேர் படிச்​சேன்.​ இறுதி ஆண்டு படிக்​கும் போது​தான் சென்​னைக்கு வந்​தேன்.​ ​நான் சென்​னைக்கு படிக்க வந்த போது ஜெயா​டி​வி​யில் இருந்து எங்க கல்​லூ​ரி​யில் நிகழ்ச்சி தொகுப்​பா​ளினி தேர்வு செய்​தார்​கள்.​ அதில் தேர்வு ஆனேன்.​

அம்மா, ​​ அண்​ணன்,​​ நான் மட்​டும்​தான்.​ அப்பா இறந்​து​விட்​டார்.​ அம்மா கல்​லூரி பேரா​சி​ரி​யை​யாக இருந்​த​வங்க.​ இப்போ வேலையை விட்​டு​விட்டு வீட்​டில்​தான் இருக்​கி​றார்​.​ அண்​ணன் ஸ்கி​ரிப்ட் ரைட்​டர்.​

படிப்​பில் சாதிக்க வேண்​டும் என்று நினைக்​கிற குடும்​பம்.​ அத​னால அம்மா கண்​டிப்​பாக டி.வியில தோன்ற ஒத்​துக்க மாட்​டாங்க,​​ என்ன செய்​வது என்று யோசித்​தேன்.​ ஆனால் என்​னோட தோழி​கள் எல்​லாம் கிடைத்த வாய்ப்பை நழு​வ​விட வேண்​டாம் என்று சொன்​னார்​கள்.​ அதனால​ அம்மா​வுக்​குத் தெரி​யாம ஜெயாடி.வி.யில காலைல வரும் "தக​வல்.காம்' என்ற நிகழ்ச்​சி​யைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன்.​

ஒரு​நாள் அம்மா டி.வியில் என்​னைப் பார்த்​து​விட்டு ரொம்ப சத்​தம் போட்​டார்​கள்.​ பிறகு அம்​மா​வி​டம் பேசி ஒரு வழியா சம்​ம​தம் வாங்​கி​விட்​டேன்.​ அம்மா எப்​ப​வுமே ரொம்ப பிராக்​டிக்​கலா யோசிப்​ப​வங்க.​

எப்​ப​வுமே ரொம்ப என்​கரேஜ் செய்​வாங்க.​ அத​னால என்​னோட ஆசையைப் புரிந்து கொண்டு சரின்னு சொல்​லிட்​டாங்க.​ ஆனா தோற்றுப் போய் மட்​டும் வரக் கூடாது என்று.

பிரம்மா சார் முல​மா​கத்​தான் முதன் முத​லில் தொலைக்​காட்​சிக்கு வந்​தேன்.​ விஜய் டிவி​யில் வி.ஜே.வாக நிகழ்ச்​சி​கள் தொகுத்து வழங்கி கொண்​டி​ருந்​தேன்.​ அப்போ "தென்​றல்' தொட​ரில் என் கேரக்​ட​ருக்கு நடிக்க ஒப்​பந்​த​மாகி இருந்​த​வங்க வரா​த​தால்,​​ நான் அந்த கேரக்​ட​ருக்கு பொருத்தமாக இருப்​ப​தாக என்​னைக் கேட்​டாங்க.​ ​

முத​லில் தயக்​க​மா​கத்​தான் இருந்​தது.​ என்​னால அந்த கேரக்​டர் செய்ய முடி​யுமா என்று நினைத்​தேன்.​ இதற்காக நிஜ​மா​கவே ஆட்டோ ஓட்ட கற்​றுக் கொண்​டேன்.​ ஆட்டோ ஓட்டு​வது அவ்​வ​ளவு ஈசி​யான விஷ​ய​மல்ல.​ ​அவங்க பாடி லாங்​வேஜ்,​​ அந்​தக் குரல் எல்​லாம் ரொம்ப கஷ்டப்​பட்டு ஹோம் ஒர்க் செய்ய வேண்​டி​யி​ருந்​தது.​ இருந்தாலும் ஆட்டோ ஓட்​டு​வது ரொம்ப பிடிச்​சி​ருக்கு.​ தொடர் இல்​லைன்னா கூட கைவ​சம் ஒரு தொழில் இருக்​குங்க ​(சிரிக்​கி​றார்)​.​

மைனா திரைப்படத்தில் வில்​லத்​த​ன​மான கேரக்​டர்​கூட யோசிக்​கா​மல் செய்​து​விட்​டேன்.​ ஆனால் ஆட்​டோ​கா​ரி​யாக மேக்​கப்பே இல்​லாம நடிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.​​ வெளி​யில் எங்​கா​வது சென்​றால் ரசி​கர் தெரிந்து கொண்டு ஆட்டோ வருமா என்று கேட்​கி​றார்​கள்.​ அதுவே எனக்கு கிடைத்த வெற்​றி​யாக நினைக்​கி​றேன்.​ ​

தென்றலின் வெற்றியைத் தொடர்ந்து வேட்டை, தியாகம், மூன்று முகம், உயிரின் நிறம் ஊதா, போன்ற பல்வேறு தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

பெரிய திரையில் "மைனா", படத்தில் வில்லி கதாபாத்திரம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதுபோன்ற பேசப்படும் கதாபாத்திரங்கள் கிடைத்தால் சினிமாவிலும் நடிப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறி சிரிக்கிறார் ஆட்டோ ராணி கல்யாணி.

 

Post a Comment