சிரிப்பு லோகம் என்ற பெயரில் கிச்சு கிச்சு மூட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் தற்போது ரசிகர்களை அழவைக்கும் அறுவை லோகமாக மாறிவருகிறது என்று ரசிகர்களிடையே கருத்து நிலவிவருகிறது.
எமலோகத்தில் தினசரி நடக்கும் நிகழ்வுகள்தான் சிரிப்பு லோகத்தின் கதை. எமதர்மனாக சின்னிஜெயந்த், எமனின் மனைவியாக ஆர்த்தி கணேஷ்கரும் நடித்திருக்கின்றனர். சித்திரகுப்தனாக வென்னிற ஆடை மூர்த்தி, அவரது உதவியாளராக சிட்டிபாபு நடித்திருக்கும் இந்த தொடரில் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
பூலோகத்தில் இறந்து போன மனிதர்கள் மேலோகத்தில் சென்று அவரவரின் பாவ புண்ணியங்களை கூறி அதற்கேற்ப தண்டனை வழங்கப்படுகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை தொடங்கினர் சின்னி ஜெயந்த் அன் கம்பெனியினர். ஆனால் இதில் நகைச்சுவைக்கு பதிலாக ஒரே அறுவை மயமாக இருக்கிறது. வசனங்கள் எதுவும் உறுப்படியாக இல்லை.
எமலோகத்தில் காவல் இருக்கும் பூதங்கள் செல்போன் எல்லாம் வைத்து பேசுகின்றனராம். அங்கே போய் டவர் வைத்தது யார் என்று தெரியவில்லை?. பூலோகத்தில் இறந்து போன ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் சித்திர குப்தனுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு கடைசியில் எமலோகத்தை பிளாட் போட்டு விற்பனை செய்கிறாராம். சிரிக்க வைக்கிறேன் என்று கிச்சு கிச்சு மூட்டும் நடிகர்கள் உறங்கப்போகும் நேரத்தில் ரசிகர்களை வெறுப்பேற்றி அழ வைக்கின்றனர்.
லோகத்திலே இப்படியெல்லாமா ஓய் பயமுறுத்துவது...!
Post a Comment