ஏதாவது புதுமையா செய்யணும் ...'சிரிப்பொலி' ராஜி

|

Siripoli Top 10 Comedy Anchor Raji

கலைஞர் சிரிப்பொலி டிவியில் ஞாயிறுதோறும் டாப் டென் காமெடியை தொகுத்து வழங்கும் ராஜி எம்.ஏ., மாஸ்கம்யூனிகேசன் படித்தவராம். "எதை செஞ்சாலும் திட்டமிட்டு செய்ய வேண்டும். உறுதியான முடிவோடு உழைத்தால் நினைச்சது நடக்கும்', என்று சொல்லும் ராஜியின் பொறுப்பான பேட்டியை படியுங்களேன்.

எம்.ஏ., ஜர்னலிசம் மாஸ் கம்யூனிக்கேஷன் கோர்ஸ் படிச்சிருக்கேன். படிப்பு முடிச்சதும் "டிவி' மீடியாவுக்கு போகணுன்னு ஆசை வந்தது. நினைச்ச பீல்டுக்கே வந்துவிட்டேன்.

டிவி பீல்டுக்கு வருவதற்கு என் அப்பாவும் ஒரு காரணம். நான் "பிளஸ் 2' படிச்சிட்டிருந்தப்ப அப்பா சந்திரமோகன் சென்னை தொலைகாட்சியில் சீரியல்களை இயக்கி வந்தார். அவரது சீரியலில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாக மெசேஜ் நிறைய இருந்தது. எய்ட்ஸ், குடி பழக்கம், புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பு என பல தகவல்கள் இடம் பெற்றிருந்தன. நானும் அப்பாவுடன் உதவி இயக்குனராக வேலை பார்த்தேன்.

பிறகு ராஜ் "டிவி'யில் "பரதம்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். இப்ப கலைஞர் "டிவி'யில் "வண்ணத்திரை' சிரிப்பொலியில் "ஜாலியா தமாஸ் டாப் டென் காமெடி' நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறேன். கலைஞர் நியுஸ்ல "உங்கள் மாவட்ட செய்தி'யிலும் வேலை பார்த்திருக்கேன்.

நிகழ்ச்சி நடத்த போவதற்கு முன்பாக ஒரு முறை வீட்டில் எனக்கு நானே ரிகர்சல் பார்த்துக் கொள்வேன். நிகழ்ச்சிகளை எந்தெந்த தருணங்களில் எந்த விதமாக தொகுத்து வழங்கினால் ரசிகர்களை ஈர்க்கலாமென்றும் நினைப்பேன். காம்பியரிங் போது அழகான உச்சரிப்பு, மேனரிஸம், ஸ்டைல் என கவனம் செலுத்தும் போது நிகழ்ச்சி மெருகேறும். ரசிகர்களிடம் வரவேற்பை பெறும்.

ரேடியோ எப்.எம். ,மில் "மும்பை சுந்தரி, திக்... திக்... தீபா' நிகழ்ச்சிகளுக்கு காம்பியரிங் செய்தேன். நிகழ்ச்சி எப்படியிருந்தால் ரசிப்பாங்கன்னும் அப்சர்வ் பண்ண முடிந்தது. "உங்களுக்காக 'நிகழ்ச்சிக்கு காம்பியரிங் செய்தபோது நிறைய ரசிகர்களோட எண்ணங்களை புரிந்து கொள்ள முடிந்தது. ரசிகர்கள் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களை ஈர்க்கும் வகையில் என்னோட காம்பியரிங் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது.

இன்றைக்கு பெண்கள் எல்லாத்துறையிலும் பயமின்றி கால் பதிக்க முடிகிறது. எந்தப் போட்டியையும் அறிவு பூர்வமாக சமாளித்து ஜெயிக்க கூடிய நிலையும் உள்ளது. எந்தத் துறையில் விருப்பம் இருக்கோ அதற்கு செல்ல வழியை தேட வேண்டும். மாதம் ஆனா சம்பளம் வருதுன்னு இல்லாம பார்க்கிற பணியில மேலும் , மேலும் வளர்வதற்கான வழிகளில் கவனம் செலுத்தினால் போட்டிகளை சமாளித்து நினைத்த இலக்கை எட்டலாம் என்று நம்பிக்கையுடன் கூறினார்

 

Post a Comment