எஸ்ஏ சந்திரசேகரன் படத்திலிருந்து ரீமா சென், கார்த்திகாவும் விலகல்!!

|

Reema Sen Karthi Quit Sac Movie

எஸ் ஏ சந்திரசேகரன் தன் உதவியாளரை வைத்து இயக்க, அவர் மகன் நடிகர் விஜய் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறை ரீமேக் படம், இப்போதைக்கு இருட்டைவிட்டு வெளியே வருவதாகத் தெரியவில்லை.

இந்தப் படத்தின் நாயகனாக பிரபு மகன் விக்ரம் பிரபு நடிக்கவிருந்தார். ஆனால் இப்போது விக்ரம் அந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ள, புதுமுகம் ஒருவரை ஹீரோவாக்க எஸ் ஏ சந்திரசேகரன் முடிவு செய்துள்ளாராம்.

இந்த நிலையில் படத்தின் ஹீரோயின் கார்த்திகா, இந்த ஆட்டத்துக்கு நான் வரலே என்று ஒதுங்கிக் கொண்டுள்ளாராம். விக்ரம் ஹீரோ இல்லாத நிலையில் புதுமுகத்துடன் நடிக்க முடியாது என்று அவர் பிடிவாதமாக உள்ளாராம்.

அடுத்து படத்தில் குத்தாட்டம் போட ஒப்புக் கொண்ட ரீமா சென்னும் இப்போது இந்தப் படம் வேண்டாம். என் டேட்ஸை கேன்சல் பண்றேன்ஜி என்று பக்குவமாகக் கழன்று கொள்ளப் பார்க்கிறாராம்!

காரணம்... அதே தான். விக்ரம் பிரபு ஹீரோவாக இருந்தால் அவரோடு குத்தாட்டம் போட ரெடி. வேறு புதுமுகம் என்றால் வேண்டாம் என்பதுதான் ரீமாவின் பதிலும்!

இவங்கள்லாம் பிறக்கும்போதே நடிகையாகவே இருந்தார்களோ... வாய்ப்புக்காக ஒவ்வொரு இயக்குநர் வீட்டுக் கதவையும் தட்டிய ஒரு காலத்துப் புதுமுகங்கள்தான் நாமும் என்பதை மறந்துவிட்டார்களோ!

 

Post a Comment