சான்ட்ரா புல்லக் நடித்த புதிய படத்தின் படப்பிடிப்பின்போது, செட்டுக்குள் பஸ் பாய்ந்து எதிரில் இருந்த ட்ரக்கில் மோதியது. இந்த விபத்தில் 11 பேர் படுகாயமடைந்தனர்.
சான்ட்ரா புல்லக் தி ஹீட் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் எப்பிஐ ஏஜென்டாக, ஆனால் காமெடி ரோலில் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் பாஸ்டன் நகரில் நேற்று தொடங்கியது. காலை 9.30 மணிக்கு ஷூட்டிங் தொடங்கியதும், 60 நீள பயணிகள் பஸ் ஒன்று வேகமாக செட்டுக்குள் பாய்ந்து வந்தது. படப்பிடிப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த ட்ரக்கின் மீது வேகமாக பஸ் மோதியது.
இதில் 11 பேர் காயமடைந்தனர். அவர்களில் 6 பேர் பஸ்ஸிலிருந்த பயணிகள். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பாஸ்டன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Post a Comment