பாலிவுட் நடிகை சோனாக்ஷி நடிகர் இம்ரான் கானை முதன்முதலாக சந்தித்தபோதே சுமார் 1 மணி நேரமாக நீண்ட கால நண்பர்களைப் போல பேசியுள்ளார்.
பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா இளம் நடிகர் இம்ரான் கானுடன் சேர்ந்து ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை அடுத்த பாகத்தில் நடிக்கிறார். முந்தைய பாகத்தில் அஜய் தேவ்கன், பிராச்சி தேசாய், கங்கனா ரனவ்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது எடுக்கும் படத்தில் அக்ஷய் குமார், சோனாலி பிந்த்ரே உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு சோனாக்ஷி இம்ரான் கானை முதன்முதலாக சந்தித்தார். ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக அவர்கள் இருவரும் நீண்டகாலம் பழகியவர்களைப் போல அரட்டை அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
கடைசியில் யாரோ ஒருவர் வந்து நீங்கள் இரண்டு பேரும் ஒரு மணிநேரமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்ன பிறகு தான் 1 மணிநேரம் ஓடியதையே அவர்கள் உணர்ந்துள்ளனர்.
இம்ரான் அண்மையில் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த பயணம் குறித்து அவர் கூறியதாகவும், ஐரோப்பாவில் உள்ள இடங்கள் பற்றி சோனாக்ஷி கேட்டுத் தெரிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Post a Comment