'ஜிஸ்ம் 2 வயசு வந்தவங்களுக்கான பக்கா 'ஏ' படம்தான்!' - பூஜா பட்

|

Jism 2 The Adults For The Adults Pooja Bhatt    | சன்னி லியோன்  

மும்பை: ஜிஸ்ம் 2 படம் ஒரு பக்கா ஏ படம். வயசு வந்தவர்களால், வயசு வந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட படம் இது, என நடிகையும் இயக்குநருமான பூஜா பட் கூறியுள்ளார்.

கனடிய பலான பட நடிகை சன்னி லியோன் முதல் முறையாக கொஞ்சூண்டு உடையுடன் நடிக்கும் முதல் படம் என்ற பெருமையோடு வருகிறது ஜிஸ்ம் 2.

இந்தப் படத்துக்கான விளம்பரங்கள் அனல் பறக்க ஆரம்பித்துள்ளன.

பட் கேம்பிலிருந்து வரும் ரொம்ப போல்டான படம் என்றுவேறு மார்த்தட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் பூஜா பட் கூறுகையில், "இந்தப் படம் வயசு வந்தவங்களுக்காக வயசு வந்தவர்களால் எடுக்கப்பட்ட படம். ஒரு பெண்ணின் பார்வையில் இந்தப் படத்தைத் தந்திருக்கிறேன். ஏ சான்றிதழ் வாங்கியாச்சு.

படத்தில் டபுள் மீனிங் வசனங்கள் கிடையாது. டாய்லெட் சீனெல்லாம் இல்லை. அதையெல்லாம் மற்றவர்கள் எடுக்கட்டும் என விட்டுவிட்டேன். இது பக்கா அடல்ட்ஸ் ஒன்லி படம். இந்த மாதிரி படங்கள் பார்க்கத்தான் எக்கச்சக்க ஆடியன்ஸ் இருக்காங்க. அவங்களை நம்பித்தான் எடுத்திருக்கேன்," என்றார்.

சன்னி லியோனுக்கு ஜோடியாக அருணோதய் சிங், ரன்தீப் ஹூடா நடித்துள்ளனர்.

 

Post a Comment