'செம படம்யா'.. அஜீத்தின் 2வது பில்லாவுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு!

|

Box Office Craze Ajith S Billa 2 Opened To Packed House

அஜீத் நடிப்பில் வெளியாகியுள்ள பில்லா 2 படத்துக்கு ரசிகர்களிடையே அமோக ஆதரவு கிடைத்துள்ளது. படம் பிரமாதமாக இருப்பதாக படத்தை ஓபனிங் ஷோவிலேயே பார்த்து விட்ட ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ் புல் காட்சிகளா இன்று பில்லா 2 படம் ரசிகர்கள் கண் முன் விரிந்தது. படம் தொடக்கம் முதல் முடிவு வரை கிளாஸாக இருப்பதாக ரசிகர்கள் ஏகோபித்த குரலில் தெரிவித்துள்ளனர்.

முதல் பில்லாவை விட இந்தப் படம் பிரமாதமாகவும், பிரமாண்டமாகவும் இருப்பதாக ரசிகர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே பில்லா 2வின் ரிலீஸுக்காக ரசிகர்கள் தயாராகி வந்தனர். இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500 தியேட்டர்களுக்கும் மேலாக திரையிடப்பட்டது பில்லா 2. தமிழகத்தில் மட்டும் 600 தியேட்டர்களுக்கும் மேல் இது திரையிடப்பட்டுள்ளது.

தெலுங்கிலும் இப்படம் டேவிட் பில்லா என்ற பெயரில் டப் ஆகியுள்ளது. படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கே சென்னையில் தொடங்கி விட்டது. அஜீத் ரசிகர்கள் முதல் நாள் ஷோவுக்கு ஏற்கனவே டிக்கெட் வாங்கி வைத்து விட்டு இன்று காலையிலேயே தங்களது தலைவரின் படத்தை தரிக்க குவிந்து விட்டனர். திரையிட்ட இடமெல்லாம் அஜீத்தின் ரசிகர்கள் கூட்டம் திருவிழாக் கூட்டமாக இருந்தது.

படம் சூப்பர், மெகா ஹிட் என்பதே ரசிகர்களின் இறுதி தீர்ப்பு... இன்னும் சில நிமிடங்களில் விமர்சனம் வருகிறது. காத்திருங்கள்...

 

Post a Comment