சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் மறக்க முடியாத நாள் ஜூலை 13. அன்றுதான் ரஜினி உடல்நலம் பெற்று சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்தார்.
அவர் உடல் நலம் பாதித்த நாளிலிருந்து, நலமுடன் நாடு திரும்பி வரும் வரை நடந்த ரசிகர்களின் பிரார்த்தனைகள் கொஞ்சமல்ல. மன்றத்திலிருப்பவர்கள் என்றில்லாமல், சாதாரண பொதுமக்களும் மனமுருகி வேண்டினர். தாய்மார்கள் பலர் விரதமிருந்தனர். சிலர் முடிகாணிக்கை கூட செலுத்தினர்.
இப்போது ரஜினி நலமுடன் உள்ளார். அவர் நடிப்பில் அடுத்த படமும் வெளிவரவிருக்கிறது.
தங்களை தலைவரின் உடல் நிலை சரியானதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக சென்னை மாவட்ட மன்றத்தைச் சேர்ந்த ரசிகர்கள் வியாழக்கிழமை காலை யாத்திரை புறப்பட்டுள்ளனர். ரஜினி உடல் நலமின்றி இருந்தபோது எந்தெந்த புனிதத் தலங்களுக்குப் போய் வேண்டிக் கொண்டார்களோ, அந்த கோயில்களுக்கெல்லாம் போய் நேர்த்திக் கடன் செலுத்தப் போகிறார்கள்.
சென்னை மன்ற நிர்வாகிகள் ராமதாஸ், கே ரவி, சூர்யா மற்றும் சைதை ரவி உள்ளிட்டோர் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர்.
பகல் 11 மணிக்கு ராகவேந்திரா மண்டபத்திலிருந்து ஒரு மினி பஸ்ஸில் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.
யாத்திரையை முடித்துக் கொண்டு ரஜினி வீட்டுக்குப் போன அனைவரும், பிரசாதத்தை அவர் வீட்டில் ஒப்படைத்தனர்.
Post a Comment