பரங்கிமலை தர்காவில் சந்தனக் குடம் எடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

|

Ar Rahman Attended Special Prayer At St Thomas Mount

சென்னை: பரங்கிமலை தர்காவில் நடந்த உரூஸ் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்புப் பிரார்த்தனை நடத்தி சந்தன குடம் எடுத்தார்.

சென்னை பரங்கிமலை ராணுவ அலுவலர் பயிற்சி மையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது ஹஸரத் சையத் ஷா அலி மஸ்தான் ஷமன் ஷா அலி தர்கா. மிகவும் புகழ்பெற்ற இந்த தர்காவில் 128-ம் ஆண்டு சந்தன முபாரக் உரூஸ் திருவிழா நடைபெற்றது. கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், நேற்று முன்தினம் மாலை சந்தன குடம் ஊர்வலம் நடைபெற்றது.

ஆலந்தூரின் முக்கிய வீதிகளில் இந்த சந்தன குடம் ஊர்வலமாக சென்று வந்தது. சந்தன குடம் ஊர்வலம் தர்காவிற்கு வந்ததும் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தலையில் சந்தன குடத்தை சுமந்து ஊர்வலத்துடன் சென்றார்.

அதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

+ comments + 3 comments

shakee
16 July 2012 at 15:26

இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை செய்துகொண்டிருக்கின்றீர்களே இது எந்த குர்ஆனில் உள்ளது (ஹஸரத் சையத் ஷா அலி மஸ்தான் ஷமன் ஷா அலி) அவர்களா இந்த சிர்க்கை செய்யச்சொன்னார்கள் இது அல்லாஹ்வுக்கே இணைவைப்தாகும் ஏன் மாற்று மதத்தவர்கள் பால்குடம் எடுப்படு போல் நீங்கள் சந்தனக்கடம் எடுக்கின்றீர்களா அல்லாஹ்வைத் தவிர வேறுயாறிடமும் உதவிபெற முடியாது உங்களுக்கெல்லாம் நரக நெருப்புதான் காத்துக்கிடக்கு அல்லாவிடம் பாவமண்ணிப்புதேடிக்கொள்ளுங்கள் சகோதரர்களே
(அல்லாஹ் அக்பர்)

Anonymous
16 July 2012 at 15:27

18 July 2012 at 15:30

aduthavangala thunpuruthuna mattumthan thandanai, matha padi, vera ethu senchalum(palkudam, santhana kudam) thandanai undunnu entha kadaulum sollala bro

Post a Comment