கிசு கிசு - திருமணத்துக்கு நடிகை கண்டிஷன்

|

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

கோலிவுட்ல வில்லனா நடிச்சிட்டிருந்த லால் நடிகரு மல்லுவுட்ல ஹீரோவா நடிக்கறாராம்... நடிக்கறாராம்... ஒரு படம் ஓடுனா பல படம் ஊத்திக்கிதாம். இதெல்லாம் நானா தேடிக்கிட்டதுதான். எனக்கு பிரண்ட்ஸுங்க ஜாஸ்தி. அவங்க வந்து இந்த கேரக்டர்ல நடிச்சா நல்லாயிருக்கும்னு கேக்கறாங்க. அது பொருத்தமா இருக்காதுன்னு தெரிஞ்சும் பிரண்ட்சிப்புக்காக ஒத்துக்கறேன். இதையெல்லாம் கட் பண்ணாதான் உருப்படுவேன்னு புலம்பறாராம்... புலம்பறாராம்...  

வம்புக்கு பேர்போன சோன நடிகை கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டிருந்தாராம்... இருந்தாராம்... இப்ப அவரோட எண்ணத்த மாத்திகிட்டாராம். இது பத்தி அவர் தன்னோட டுவிட்டர் பக்கத்துல கண்டிஷனோடு தன் விருப்பத்தை தெரிவிச்சிருக்காராம். விவாகரத்தான அழகான ஆண் சம்மதித்தால் அவர கல்யாணம் பண்ணிக்குவேனு சொல்லி இருக்காராம்... இருக்காராம்... ஆனா தான் சொல்றபடிதான் அவர் நடக்கணும்னு அடுத்த குண்டை தூக்கிப் போட்டிருக்காராம்...
போட்டிருக்காராம்...

பிரகாச ஹீரோ நடிச்ச¤ருக்கிற டபுள் ஹீரோ படத்தோட வேல ஜரூரா நடக்குதாம்... நடக்குதாம்... நிறுத்தி நிதானமா சீன்கள எடுத்திருந்த குழுவுக்கு திடீர்ன்னு அதிர்ச்சி கொடுத்தாரு பெல் ஹீரோயின். சான்டல்வுட்ல அவர் நடிக்கற ஒரு படமும் இதேபாணில தயாராயிட்டிருக்காம். போட்டி வேகத்துல ரெண்டு தரப்பும் சரமாரியா தகவல்கள லீக் செய்றாங்களாம். பெல் நடிகை பட சாயல் வந்துடக்கூடாதுன்னு பிரகாச படத்துக்கு புதுசா சில காட்சிகளை ஷூட் பண்றாங்களாம்... பண்றாங்களாம்...


 

Post a Comment