இயக்குநர் பேரரசு முதல் முறையாக இயக்கும் மலையாளப் படத்துக்காக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆர்யாவை நீக்கிவிட்டு, ப்ருத்விரகாஜை ஒப்பந்தம் செய்துள்ளார்.
தடாலடிப் படங்களுக்குப் பெயர் போனவர் பேரரசு. இன்று அவர் கிண்டலாகப் பார்க்கப்பட்டாலும், விஜய், அஜீத் இருவருக்குமே லைப் கொடுத்தவை அவரது படங்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழில் இப்போது இவருக்குப் படங்கள் இல்லாத நிலையில், இவர் மலையாளத்தில் ‘சன் ஆப் அலெக்ஸாண்டர்' என்ற படத்தை இயக்குகிறார். இதுவும் அதிரடி ஆக்ஷன் கதைதான்.
இப்படத்தில் நடிப்பதற்காக முதலில் ஆர்யாவிடம் பேசப்பட்டது. ஆனால் மலையாள படவுலகில் ஆர்யாவுக்கு பெரிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் ஆர்யாவை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் யோசித்தனர்.
இதையடுத்து இப்பொழுது ஆர்யாவை ஒப்பந்தம் செய்வதை விட்டுவிட்டு மலையாள படவுலகில் பிரபலமாக இருக்கும் பிருத்விராஜை ஒப்பந்தம் செய்யுமாறு தயாரிப்பாளர்களுக்கு சிபாரிசு செய்துள்ளார் பேரரசு.
பிஸினஸ்தானே முக்கியம்... அதனால துணிஞ்சி முடிவெடுங்க சார் என்று தயாரிப்பாளரிடம் கூறினாராம் பேரரசு!
Post a Comment