சிவசங்கரி தொடரில் மாயாஜால திருப்பங்கள்!

|

Sivasankari Serial Coming Episode S

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிவசங்கரி தொடரில் மாயாஜால காட்சிகளும், மந்திர தந்திரங்களும், திடீர் திருப்பங்கள் வர உள்ளதாக தொடர் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

பஞ்சலிங்கத்தை தேடிச் செல்லும் சிவசங்கரி ஒருவரின் வீட்டில் தங்குகிறாள். அந்த வீட்டில் உள்ள கவிதா என்ற பெண்ணிற்கு சிறுநீரக கோளாறு என்று தெரியவருகிறது. சில மாதங்களில் மரணமடைந்து விடுவாள் என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்ட நிலையில் தேவதை மீனிடம் ஆலோசனை கேட்கிறாள் சிவசங்கரி.

சதுரகிரி மலையில் உள்ள சஞ்சீவி மூலிகையினால் கவிதாவை காப்பாற்ற முடியும் என்று கூறிய தேவதை மீன் அந்த குகையை அரக்கன் ஒருவன் காவல் காத்து வருவதாகவும் அரக்கனின் கேள்விக்கு பதில் கூறிவிட்டு சஞ்சீவி மூலிகையை பறித்து வரலாம் என்றும் கூறுகிறாள்.

கவிதாவின் காதலனுடன் சதுரகிரிக்கு செல்லும் சிவசங்கரி அங்கு அரக்கனை சந்தித்து சஞ்சீவி மூலிகையை பறித்தாளா? என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.

திடீர் திருப்பங்களும், மாயஜாலாங்களும், மந்திர வித்தைகளும் நிறைந்த புதிய கதைக்களம் இனி சிவசங்கரி தொடரில் வர இருக்கின்றன. சன் டிவியில் சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணிவரை ஒளிபரப்பாகும் சிவசங்கரி தொடரை ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தினர் தயாரித்து வழங்கி வருகின்றனர். ஒ.என். ரத்னம் இயக்கும் இந்த தொடரில் அஜய் ரத்னம், ரஜேந்திரன், சுஹாசினி, அனுஸ்ரீ, சாந்தி ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

Post a Comment