தெலுங்கு பேசும் ஓகேஓகே!

|

Okok Goes Telugu   
தமிழ் சினிமாவைக் கலக்கிய காமெடி திருவிழாவான சந்தானம் - உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடி, அடுத்து தெலுங்குக்குப் போகிறது.

தமிழில் இப்படம் குவித்த வசூலைப் பார்த்து, இதன் தெலுங்கு உரிமைக்கு பலர் போட்டியிட்டனர். ஆனால், படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை யாருக்கும் தரப்படவில்லை. மாறாக மகதீரா போல இப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

'ஓகே.. ஓகே' என்ற தலைப்பில் ஆந்திராவில் இப்படம் வெளியாகிறது. ஹன்ஸிகா தவிர எல்லோருமே ஆந்திராவுக்கு புதிது என்பதால், ரசிகர்களுக்கு இது ஒரு டப்பிங் படம் என்ற உணர்வே இருக்காது என்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

ஹன்சிகா, ஹாரிஸ் ஜெயராஜ் இருவருக்குமே தெலுங்கிலும் நல்ல மவுசு இருக்கிறது.

எனவே தெலுங்கு சினிமாவின் கறுப்புக் குதிரை மாதிரி திடீர் வெற்றியை இந்தப் படம் தரலாம் என்ற எதிர்ப்பார்ப்பு இருப்பதால், படத்தைத் திரையிட விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுகிறார்களாம்.
 

Post a Comment