சமையல் (சகலகலா) ராணி அலமேலு: நளினியின் புதிய காமெடி தொடர்

|

K Tv Comedy Serial Program In Alamelu

வில்லத்தனமான கதாபாத்திரங்களில் கண்களை உருட்டி மருமகள்களை திட்டிக்குவிக்கும் நளினிக்கு சமையல் கைவந்த கலையாம். ஸ்டார் ஓட்டல் சமையலை விட அம்மாவின் சமையல்தான் சூப்பர் என்று அவரின் குழந்தைகளிடம் சர்ப்பிகிகேட் வாங்கி வைத்திருக்கிறாராம். சீரியசான சீரியலை விட கே டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி ஆல் இன் ஆல் அலமேலு தொடரில் நளிளியின் காமெடி கலந்த நடிப்பும் சமையல் டிப்ஸ்சும் ரசிகர்களையும், இல்லத்தரசிகளையும் பெரும்பாலும் கவர்ந்துள்ளது. இந்த தொடர்பற்றியும், தன்னுடைய அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் படியுங்களேன்.

சீரியல்னாலே வில்லத்தனம் செய்யும் மாமியார் ரோல்தான் அதிகமா செய்திருக்கேன். ஆனா 'ஆல் இன் ஆல் அலமேலு' என்னுடைய இன்னொரு பரிமாணத்தை உணர்த்தியிருக்கு.

எனக்கு சமையல் ரொம்ப பிடிக்கும். என்னுடைய குழந்தைகளுக்கு எதையாவது புதுசு புதுசா செய்து கொடுத்திட்டு இருப்பேன். அதை சாப்பிடறப்பா எந்த ஸ்டார் ஓட்டல் சமையலுக்கும் இது ஈடாகாது மம்மின்னு சொல்லுவாங்க. அதைதான் இப்பநான் 'ஆல் இன் ஆல் அலமேலு' தொடர்ல செய்றேன்.

அலமேலு தொடர்ல காமெடியோட விதவிதமான வெரைட்டியான சமையல் செய்யவும் இதுல கற்றுக்கொடுக்கிறோம். தவிர சுற்றுச்சூழல் பராமரிப்பு, வீட்டு அலங்காரம் என எல்லாத்துக்குமே டிப்ஸ் கொடுக்கிறோம். இதனால மற்றவங்களுக்கு சொல்றதோட நானும் நிறைய கத்துக்கிறேன் என்று மலர்ச்சியாய் சொன்னார் நளினி.

நளினி இப்போது கலைஞர் டிவியில் பொக்கிஷம், ஜெயா டிவியில் இருமலர்கள், சன் டிவியில் பிள்ளை நிலா என பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்பதற்காகவே சினிமா வாய்ப்புகளையும், வெளியூர் சூட்டிங்குகளையும் தவிர்த்து வருகிறாராம்.

பிட் நியூஸ் : 'ஆல் இன் ஆல் அலமேலு' ஆரம்பித்து 50 எபிஷோடு முடிந்து விட்டதாம். அதை குரூப் போட்டோ கொண்டாடி உள்ளனர் அலமேலு டீம் குடும்பத்தினர்.

 

Post a Comment