தெலுங்கு நடிகர் ராணா டக்குபாதி நடித்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்ற படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகிறது. இந்த பம் மூலம் ராணா கோலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார்.
தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரும், த்ரிஷாவின் பெஸ்ட் பிரெண்டுமான ராணா டக்குபாதி, நயன்தாரா நடிக்கும் படம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும். கிருஷ் இயக்க, மணிசர்மா இசையமைக்கும் இந்த படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகிறது. இந்த படத்தின் மூலம் ராணா தமிழுக்கு வருகிறார். ஜகத்குரும் படப்பிடிப்பு ஹைதராபாத், பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தற்போது சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து ராணா டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
ஆம், இந்த செய்தி உண்மை தான். கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகிறது. என்னுடைய படங்களிலே இது தான் ஒரே நேரத்தில் 2 மொழிகளில் வெளியாகிறது. முதல் தடவையாக சென்னையில் படப்பிடிப்பு, முதன் முறையாக தமிழில் டயலாக். சந்தோஷமாகவும், பெருமையாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ராணா ஜோடியாக நயன்தாரா. த்ரிஷா என்ன மனநிலையில் இருக்கிறாரோ தெரியவில்லையே.
Post a Comment